இந்தியா, ஏப்ரல் 22 -- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், வரும் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26, 2025 தேதிகளில் ஆளுநர் மாளிகை உதகமண்டலத்தில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரு. ஜக்தீப் தன்கர், மாண்புமிகு இந்திய குடியரசு துணைத்தலைவர், முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளார்.

ஏப்ரல் 25, 2025 அன்று துணைவேந்தர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். திரு. ஆர்.என்.ரவி, மாண்புமிகு தமிழ...