இந்தியா, ஏப்ரல் 23 -- துணை வேந்தர்கள் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகைக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரப்போட்டி நடப்பது போல் சில ஊடகங்கள் சித்தரிப்பதாகவும், அவை உண்மைக்கு புறம்பானவை என்றும் ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நமது மாநிலத்தில் உள்ள மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் வருடாந்திர மாநாடு குறித்து, ராஜ்பவனுக்கும், மாநில அரசுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி போல, சில தவறான ஊடகச் செய்திகள் சமீப நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த அறிக்கைகள் முற்றிலும் தவறானவை மற்றும் குறும்புத்தனமானவை.

மேலும் படிக்க:- 'டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தலாம்!' உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தமிழக அரசின் மனு...