இந்தியா, ஏப்ரல் 19 -- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த சந்திப்பு, தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலில் நடைபெற்றிருப்பதால், அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. மேலும், மசோதாக்களுக்கு முடிவெடுப்பது குறித்து குடியரசு தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்திருந்தார். "நாடாளுமன்றத்தின் வேலையை, உச்சநீதிமன்றம் செய்து வருவதாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள பிரிவு 142 ஆனது ஜனநாயகத்திற்கு எதிரான அணு ஆயுதமாக மாறிவிட்டதாகவும்" விமர்சனம் செய்து ...