மதுரை,சென்னை,திருச்சி,கோவை, ஏப்ரல் 5 -- ''நீரின்றி அமையாது உலகு" என்ற காலம் மாறி, "கடனின்றி அமையாது உலகு" என்ற நிலை வந்துவிட்டது. நாடே கடனாளியாக இருக்கும்போது நாம் மட்டும் என்ன விதிவிலக்கா? தனி மனிதர் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்ப ஆயிரம், லட்சம், கோடிகளில் கடன் பெற்று கடனாளியாக இருக்கின்றனர். கடனை இரு வகையாக பிரித்து கொள்ளலாம். ஒன்று சுப கடன், மற்றொன் அசுப கடன்.

சுப கடன்: சுப கடன் என்பது வீடு கட்டுவது, தொழில், வியாபாரத்தை விருத்தி செய்வது, கல்வி கற்க என வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் கடன்களை சுப கடனாக எடுத்து கொள்ளலாம்.

அசுப கடன்: அசுப கடன் என்பது வீண் செலவுக்காக கடன் பெறுவது, மருத்துவ செலவுக்காக கடன்படுவது, ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் பெறுவது, அளவுக்கு மிஞ்சி கடன் பெற்று வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டி மன வேதனை அடைவதை அசுப ...