இந்தியா, ஏப்ரல் 22 -- ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 27 வரையில் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் சில முக்கியமான படங்களை இங்கே பார்க்கலாம்.

மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான L2 எம்புரான் மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது. நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

குஜராத் கலவரத்தை மையப்படுத்தி படத்தில் காட்சிகள் இருந்த காரணத்தால், படம் சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து படத்தின் சில காட்சிகளும் தணிக்கை குழுவால் நீக்கப்பட்டது. இருப்பினும் அனைத்து தடைகளை தாண்டி இப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் ஏப்ரல் 24ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

மேலும் படிக்க | ரியல் எஸ்டேட் நிறுவன பணமோசடி விவகாரம்...