இந்தியா, ஜூன் 16 -- 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் விசிக சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது, 'பேசு பேசு நல்லா பேசு' என்று தான் எழுதிய புத்தகத்தை திருமாவளவனிடம் கொடுத்தார் வைகைச்செல்வன். தொடர்ந்து இருவரும் அரசியல் குறித்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசினார்கள்.

ஏற்கனவே திமுக கூட்டணியிலுள்ள கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்த சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்' என்று கூறிவருகிறார். அதேவேளையில், வரக்கூடிய 2026 சட்டம...