இந்தியா, மே 2 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் செல்வம் செழிப்பு சொகுசு ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

ராகு மற்றும் சுக்கிரன் இருவரும் தற்போது சேர்ந்து மீன ராசியில் பயணம் செய்து வருகின்றனர். வருகின்ற மே 18ஆம் தேதி வரை இந்த சேர்க்கை இருக்கும். ராகு சுக்கிரன் மீன ராசி பயணம் அனைத்து ரா...