பஹல்காம்,காஷ்மீர்,டெல்லி, ஏப்ரல் 22 -- ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய கடற்படை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார். அவர் கொச்சியில் பணியமர்த்தப்பட்ட லெப்டினன்ட் வினய் நர்வால் என அடையாளம் காணப்பட்டார். ஹரியானாவை சேர்ந்தவர் இவரது வயது 26. அவருக்கு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் பஹல்காமுக்கு மனைவியுடன் தேனிலவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. பஹல்காமில் இன்று தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: சவுதி அரேபியா பயணத்தை ரத்து செய்து இன்று இரவே இந்தியா திரும்பும் மோடி!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கான தனது அரசுமுறைப் பயணத்தை ரத்து செய்து...