இந்தியா, மார்ச் 15 -- Tirupati Temple: திருமலை திருப்பதியில் வீற்றியிருக்கக்கூடிய வெங்கடாஜலபதியை தரிசித்துச் செல்ல தினமும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை வழிபட்டால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை முறையாக இருந்து வருகிறது. அதன் காரணமாகவே திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர். அந்த வகையில் பல விசேஷ சிறப்புகளைக் கொண்ட இந்த திருப்பதி திருமலையில் இருக்கக்கூடிய ஏழு சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு காணலாம்.

திருமலை வாசனாக விளங்கக்கூடிய வெங்கடாஜலபதிக்கு ஏழு மகிமைகள் இருக்கின்றன. சீனிவாச மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, ஷேத்திரம் மகிமை, பத்மாவதி மகிமை, பகுளா தேவி மகிமை என ஏழு மகிமைகள் உள்ளன.

பரம்பொருளாக திகழ்ந்துவரும் வெ...