இந்தியா, மார்ச் 22 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணம் செய்யக் கூடியவர். சனி பகவானின் தாக்கம் ஒருவருடைய வாழ்க்கையில் மிகவும் அதிகமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் ஒரு ராசியில் பயணம் செய்வார்.

சனி பகவானின் மாற்றங்களின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில நேரங்களில் சில ராசிகளுக்கு நன்மைகளும் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலைகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சனி பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார்.

அந்த வகையில் சனிபகவான் வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று மீன ராசியில் உதயமாகின்றார். குருபகவானின் மீன ராசியில் சனி...