இந்தியா, மார்ச் 28 -- ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகத்தின் இடமாற்றமும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இணையும் சூழ்நிலை ஏற்படும் அந்த நேரத்தில் ராஜயோகங்கள் உருவாக்குகின்றன மார்ச் மாத இறுதியில் திரிகிரக யோகம் உருவாக உள்ளது.

இந்நிலையில் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று சனிபகவான் மீன ராசிக்கு செல்கின்றார். அப்போது இணைந்து திரிகிரக ராஜயோகமும் உருவாக்குகின்றது. இந்த ராஜயோகம் 12 ராசிகளுக்கும் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவக்கிரகங்களில் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவானின் பெயர்ச்சி இந்த ஆண்டு நிகழ்கின்றது. சனிபகவான் கும்ப ராசியை விட்டு விலகி மீன ராசிக்கு செல்கின்றார். மீன ராசியில் ஏற்கனவே ராகு புதன் சுக்கிரன் உள்ளிட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ...