இந்தியா, மார்ச் 15 -- திரிகிரக யோகம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பயிற்சிகள் மற்றும் அதனால் உருவாகும் யோகங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது மனித வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் இடமாற்றமும் தனித்துவமான ஆற்றலை கொண்டதாக கூறப்படுகிறது.

சில நேரங்களில் ஒரே ராசியில் பல கிரகங்கள் இணையக்கூடிய வாய்ப்புகள் அமையும். அந்த வகையில் இந்த ஆண்டு மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணைந்து திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த மார்ச் மாதத்தில் சனி சுக்கிரன் மற்றும் சூரியன் இணைந்து சக்தி வாய்ந்த இந்த திரிகிரக யோகத்தை ...