இந்தியா, ஜூன் 22 -- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட ஆய்வுக்கு சபரீசன்-செந்தாமரை தம்பதி நிதியுதவி அளித்து உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகனும், தொழில்நுட்ப தொழில்முனைவோருமான சபரீசன் வேதாமுர்த்தி மற்றும் அவரது மனைவியும், கல்வியாளருமான செந்தாமரை ஸ்டாலின் ஆகியோர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்கம் மற்றும் அதன் சமூக-பொருளாதார மாற்றங்களை ஆய்வு செய்ய குறிப்பிடத்தக்க நிதியுதவி அளித்துள்ளனர். இந்த முயற்சி, தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதையை உலகளவில் புரிந்துகொள்ளவும், அறிவார்ந்த ஆய்வுகளை ஊக்குவிக்கவும் வழிவகுக்கும்.

இந்த நிதியுதவி, திராவிட இயக்கத்தின் அரசியல் சிந்தனை, பொதுக் கொள்கை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளை ஆராயும் நிரந்தர முனைவர் பட்ட (PhD) படிப்பு மற்றும் முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆர...