இந்தியா, மார்ச் 24 -- பிரபல யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது தாயார் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டில் புகுந்து சூறையாடியதாக வீடியோவை தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீத...