இந்தியா, ஜூலை 18 -- தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலை சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்

ஜனநாயக உரிமைகளுக்காகவும், மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், என்றென்றும் வலுவான குரலை எழுப்பி வரும் திராவிட முன்னேற்ற கழகம், தேசிய அரசியலில் மிக முக்கியமான பேரியக்கமாக திகழ்கிறது. ஒவ்வொரு முறை நாடாளுமன்ற கூட்டத்தின் போதும், தமிழ்நாட்டு...