இந்தியா, பிப்ரவரி 25 -- தமிழ்நாட்டில் மட்டும்தான் மதிய உணவிற்கு சாதம் மற்றும் அதனுடன் இணை உணவாக குழம்புகள் வைக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களை எடுத்துக் கொண்டால் அங்கு செய்யப்படும் உணவுகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்க வாய்ப்புள்ளது. ஒரு சில உணவுகள் மட்டுமே தமிழ்நாட்டை ஒத்து காணப்படுகின்றன. இந்த வகையில் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அதிகமான குழம்பு வகைகளை தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பழைய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை கிராமப் பகுதிகளில் அதிகமான குழம்பு வகைகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் நாம் வழக்கமாக செய்யும் குழம்பு என்றால் சாம்பார், புளி குழம்பு மட்டுமே. இது சில சமயங்களில் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். எனவே எளிமையாக புதுவிதமான ஒரு குழம்பை தான் இங்கு கொண்டு வந்திருக்கிறோம். அதுதான் பருப்பு உர...