இந்தியா, மே 8 -- தமிழக அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது துரை முருகனின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து துரைமுருகன் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் இலாகா மாற்றப்பட்ட நிலையில் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பின்படி, அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.