குஜராத்,சபர்மதி,சென்னை,காரைக்குடி, ஏப்ரல் 8 -- அகமதாபாத்: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை சபர்மதி ஆசிரமத்தில் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு வெப்பம் காரணமாக அவர் மயக்கமடைந்திருக்கலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 79 வயதான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கட்சிப் பணியில் பட்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், ப.சிதம்பரத்தை அலேக்காக தூக்கிச் சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் சிதம்பரம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

ப.சிதம்பரத்தின் உடல் நிலை குறித்து, அவரது மகனும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் கூறுகையில், தனது தந்தை நலமாக இருப்பதா...