இந்தியா, பிப்ரவரி 26 -- தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில், பிரபல நாட்டுப்புற பாடகர் கிடாக்குழி மாரியம்மாளின் இசை நிகழ்ச்சி உடன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் உடன் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு உள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் தளபதி விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார்.

இதனை அடுத்து விழுப்புரம் மாவட்டம், விக்க...