இந்தியா, ஏப்ரல் 19 -- இந்தியாவிலேயே மிகப்பெரிய சமூக ஊடகப் படையாக தமிழக வெற்றி கழகத்தின் ஐ.டி. பிரிவு விளங்குவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.

சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தொகுதி வாரியாக இரண்டு பேர் வீதம் சுமார் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, சமூக வலைதளங்களில் கட்சியின் கொள்கைகளையும் மக்களின் தேவைகளையும் எவ்வாறு எடுத்துச் செல்வது உள்ளிட...