இந்தியா, ஏப்ரல் 21 -- கோவை, ஏப்ரல் 21, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கோவையில் வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே வருகிறது, நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொட...