இந்தியா, மே 16 -- கிருத்திகை நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம். அதன் அதிபதி சூரியன். மேஷ ராசியில் ஒரு பாதமும், ரிஷப ராசியில் மூன்று பாதங்களும் அமைய பெற்றிருக்கும். அதாவது கிருத்திகை நட்சத்திரத்தின் 4 பாதங்களில் முதல் பாதம் மேஷ ராசியில் அமைந்திருக்கும். 2, 3, 4-ம் பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும்.

இதனால் கிருத்திகை நட்சத்திரத்தை தலையில்லா நட்சத்திரம் என்று ஜோதிடத்தில் குறிப்பிடுவார்கள். (மேஷ ராசியில் 26 பாகை 40 கலை முதல் 30 பாகை வரை மேஷ ராசியிலும், 30 பாகை முதல் 40 பாகை வரை ரிஷப ராசியில் இருக்கும்.) கிருத்திகை நட்சத்திரத்தின் உருவ அமைப்பு கத்தி போன்ற வடிவம்.

மேலும் படிங்க| குரு மிதுனத்தில் புகுந்து ராஜயோகத்தை கொடுக்க போகும் ராசிகள்

இதன் அதிதேவதை முருகப்பெருமானின் அவதாரமான கார்த்திகேயன். தெய்வம் அக்னி. கிருத்திகை நட...