இந்தியா, ஏப்ரல் 15 -- நல்லெண்ணெய் என்பது எள் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயாகும். இது இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்ட ஒரு பயிராகும். இதன் விதைகளை செக்கில் வைத்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். நல்லெண்ணெயில் அதிகளவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இதில் மினரல்கள், மெக்னீசியம், கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களும் உள்ளது. இது தலைமுடி ஆரோக்கியத்துக்கு என்ன நன்மைகளைக் கொடுக்கிறது என்று பார்க்கலாம்.

நல்லெண்ணெய், சூரிய ஒளியில் இருந்து தலைமுடிக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இது வேர்க்கால்களையும், தலைமுடியையும் பாதுகாக்கிறது. இது பாதுகாப்பு கவசத்தை தலைக்கு கொடுத்து 30 சதவீதம் புறஊதாக் கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கிறது.

இதன் ஆன்டிமைக்ரோபியல் உட்பொருட்கள் மற்றும் ஃபேட்டி ஆசிட்கள், தலைமுடியின் வேர்க்கால்களில் ப...