Chennai, ஏப்ரல் 13 -- கோடை காலத்தில் தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமல் வறட்சி ஏற்படுவது இயற்கையான விஷயம்தான். தலை முடி வறட்சி காரணமாக முடிகள் சேதமடைவது, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது போன்ற நிலையை தவிர்க்கவும், முடி இயற்கையான பளபளப்பை பெறவும் , சரியான ஊட்டச்சத்து கிடைப்பது மிக முக்கியம்.

புரதம், பயோட்டின், இரும்பு மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தலைமுடி வேர்களை வலுப்படுத்தி இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. அத்துடன் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வது முடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. இதன் மூலம் தலைமுடி வலிமை பெறுவதோடு, நீண்ட காலம் ஆரோக்கியமான பளபளப்பை தக்கவைக்கிறது.

இயற்கையான பொருள்களையும் தாண்டி சில தலைமுடி பராமரிப்புக்காக பல்வேறு வித...