இந்தியா, ஏப்ரல் 22 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

உதவித் தொகை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். கலைந்து செல்ல மறுத்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அரசாக திமுக அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிக மாற்றுத்திறனாளிகளை சேர்த்ததுதான் தமிழ்நாடு என அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி.

ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை விமான போக்குவரத்து ஆணையம...