இந்தியா, ஜூன் 13 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கலைஞர் நினைவிடத்தில் தங்கள் சான்றிதழ்களை வைத்து மரியாதை செலுத்தினர்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் அவர் தேர்தல் அதிகாரியிடம் சான்றிதழ் பெற்றார்.

அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் சான்றிதழ்களை வைத்து ஆசி பெற்றனர்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதலமைச்ச...