இந்தியா, ஏப்ரல் 26 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கோவையில் இன்றும் நாளையும் வாக்குவ்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

சேலம் காடையாம்பட்டியில் பட்டாசு வெடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.

திருச்ச...