இந்தியா, ஏப்ரல் 29 -- தமிழ்நாட்டில் இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

சட்டப்பேரவை இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கான ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், அரசு பணியாளர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், பண்டிகை கால முன்பணம் மற்றும் கல்வி முன்பணம் ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் எனவும், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதத்தில் முன்கூட்டியே தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் போதைப் பொருள் நட...