இந்தியா, ஏப்ரல் 21 -- தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் துணை வேந்தர் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. உதகையில் நடைபெற இருக்கும் துணை வேந்தர் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது.

விசைத்தறி உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் கோவையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ் பெறப்பட்டது.

திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் என திருமாவளவன் பேச்சு.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஒழுங்கீனமான காவலர்கள் மீது, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் ...