இந்தியா, மே 28 -- VGP பொழுதுபோக்கு பூங்கா திறக்க தடை, தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய (மே 28) காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

சென்னை ECRல் உள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் பழுதானதால் 36 பேர் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு பூங்கா நிர்வாகத்திற்கு நீலாங்கரை காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விளக்கம் அளித்து ஆவணங்களை சமர்பித்த பின் பொழுதுபோக்கு பூங்காவை திறக்க காவல்துறை அறிவுறுத்தி இருக்கிறது. நேற்று ராட்டினத்தில் 50 அடி உயரத்தில் 3 மணிநேரமாக சிக்கித் தவித்த 36 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். ராட்டினம் பழுதாகி 36 பேர் அந்தரத்தில் தொங்கிய விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு கா...