இந்தியா, ஜூன் 1 -- தமிழகத்தில் நேற்று (31.5.25) நிலவரப்படி 38 பேர் புதிதாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் மிகச் சமீபத்தில் நடந்த 24 வயது நபரின் இறப்பிற்கும் கொரோனா மற்றும் இணை நோய்கள் காரணமாக இருந்துள்ளது. நோய் பரப்பும் தன்மைக்கு வாய்ப்புள்ளவர்கள் தமிழகத்தில் தற்போது 185 பேர் (Active cases) உள்ளனர். இது பெரும் பாதிப்பில்லை என்றாலும், தமிழக பொது சுகாதாரத்துறை தனியார் மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நம்பி மட்டுமே உள்ளது.

அவர்கள் சளித்தொல்லை மற்றும் காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகும் நபர்களை அரசிற்கு தெரியப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தேவை தான் என்றாலும் இது நோய் தடுப்பிற்கு போதுமானதா?

தமிழக அரசு கொரோனாவில் மூலக்கூறு உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் இருப்பதை அறிய 26 மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளது. ஏன் தமிழகத...