இந்தியா, ஏப்ரல் 5 -- சென்னை மண்டல உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ் குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு பொது சுகாதார மருந்து நிர்வாக துறைக்கு மாற்றப்பட்டுள்ள அவருக்கு பதிலாக, திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் போஸ், சென்னை மாவட்டத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்பார் என தமிழக சுகாதார துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க:- Watermelon: 'தர்பூசணி பழங்களை மக்கள் அச்சமின்றி சாப்பிடலாம்!' உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பல்டி!

இந்த பணியிட மாற்றத்திற்கு பின்னணியில், சமீபத்தில் தர்பூசணி பழத்தில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்பட்டு, சுவை மற்றும் நிறத்தை மாற்றும் வகையில் வெளியான வீடியோ சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது...