இந்தியா, ஏப்ரல் 27 -- தயிர் வடை சாப்பிட நீங்கள் இனி ஓட்டலுக்குச் செல்ல தேவையில்லை. வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளலாம். அதை எப்படி செய்வது என்ற விவரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து அதுபோல் செய்து பார்த்து மகிழுங்கள். இந்த தயிர் வடை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

* உளுந்து - ஒரு கப் (4 மணி நேரம் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ள வேண்டும்)

* உப்பு - தேவையான அளவு

(4 மணி நேரம் ஊறிய உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் தெளித்து அரைத்துக்கொள்ளவேண்டும். நல்ல மிருதுவாக அரைத்துக்கொள்ளவேண்டும். இதை புளிக்கவைக்கக்கூடாது. தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் மட்டும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் மட்டும்தான் வடை நல்ல ஷேப்பாக வரும். மாவை ஒரு மணி ந...