இந்தியா, மே 14 -- வீட்டில் காய்கறிகள் இல்லையா? வெளியே சென்று வாங்கவும் உங்களுக்கு நேரம் இல்லையா? எனில் இந்த பூண்டு - தயிர் குழம்பை எளிதாக செய்துவிடுங்கள். இந்த குழம்பை சில காய்கறிகளைப் பயன்படுத்தியும் செய்யலாம். வெறும் பூண்டு வைத்தும் செய்யலாம். இதை நீங்கள் செய்து விட்டால் போதும் உடனே காலியாகிவிடும். இதை சாதம், சப்பாத்தி என தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கு இது ஒரு சிறப்பான காம்போவாக இருக்கும். சப்பாத்தி பிரியர்களுக்கு இந்த பூண்டு - தயிர் குழம்பை மட்டும் செய்துகொடுத்துவிட்டீர்கள் என்றால், அவர்கள் மேலும், மேலும் சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அத்தனை சுவையான மற்றும் அள்ளி அள்ளி சாப்பிடத் தோன்றும் இந்த பூண்டு - தயிர் குழம்பை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)

* பெரிய வெங்காயம் - 1 (...