இந்தியா, ஜூன் 20 -- சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகள் விற்பனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று உள்ளதாக திமுக எம்.பி தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுகளுக்கு சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு உள்ள சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனுக்கு, அவரது சகோதரரும், திமுக எம்பியுமான தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில், கலாநிதி மாறன், சன் குழும நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலைக்கு தனக்குத்தானே ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும், இதன் மூலம் சன் குழுமத்தில் 60% உரிமையை மற்ற பங்குதாரர்களிடம் கேட்காமலேயே எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செ...