இந்தியா, பிப்ரவரி 21 -- தமிழ்நாடு முழுக்க 'தமிழ் வாழ்க' என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டு, அதிகாலையிலேயே பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக அரசு குரல் எழுப்பி வரும் நிலையில், மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து மாநில பாஜகவும் பொதுவெளியில் வாதம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் மும்மொழி கொள்கை தீவிரமாகி வருகிறது. இது தொடர்பாக பரஸ்பரம் சவால்களும், வசையும் செய்தியாளர் சந்திப்பில் நடந்து வருகிறது.

மீண்டும் இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நேரடியாகவே மேடையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியை எதிர்க்கும் யாரெல்லாம் இந்தி மொழி உடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்கிற பட்டியலை வெளியிட்...