இந்தியா, மார்ச் 25 -- தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத முதல் நாளில் பிறக்கின்றது. இந்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. சூரிய பகவான் 12 ராசிகளில் முதல் ராசியாக விளங்கக்கூடிய மேஷ ராசியில் நுழையும் நாள்தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் ஆண்டின் கணக்குப்படி விசுவாவசு ஆண்டு பிறக்க உள்ளது. இதற்கு உலக நிறைவு என்று பொருளாகும்.

2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ள விசுவாவசு தமிழ் புத்தாண்டில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ஜொலிக்கப் போவதாக கூறப்படுகிறது அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தமிழ் புத்தாண்டு தொடக்கத்திலேயே சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யப் போகின்றார். குரு பகவான் ரிஷப ...