Chennai, ஏப்ரல் 24 -- ஏப்ரல் 24, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆர் நடித்த பணக்கார குடும்பம், சிவாஜி கணேசன் நடித்த அமரகாவியம், விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே, பிரபு நடித்த சின்னவர், பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் போன்ற ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர், சரோஜாதேவி, நாகேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த காதல் கலந்த காமெடி படமாக உருவாகி 1964இல் வெளியான படம் பணக்கார குடும்பம். எம்ஜிஆரின் குறும்புத்தனமான நடிப்பு, காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த படம் 150 நாள்கள் திரையரங்கில் ஓடியது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. எம்ஜிஆரின் காமெடி படங்களில் ஒன்றாக இருந்து வர...