இந்தியா, ஜூன் 5 -- ஜூன் 5, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் தேசிய விருது வென்ற காக்கா முட்டை, 10 இயக்குநர் ஒரே படத்தில் நடித்த மாயாண்டி குடும்பத்தார், முரளி நடித்த பகல்நிலவு, கமல்ஹாசன் நடித்த கடல்மீன்கள் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

எம். மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிறுவர்களான ஜே. விக்னேஷ், வி. ரமேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த காமெடி ட்ராமா பாணியில் உருவாகி 2015இல் ரிலீசான படம் காக்கா முட்டை. சேரி பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள் பிட்சா சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவதும், அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதன் பயணமும் தான் படத்தின் கதை.

எதார்த்தமான காட்சிகளுடன், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அப்போது நிலவிய அரசியல் உள்பட பல்வேறு வ...