இந்தியா, மார்ச் 11 -- 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் மார்ச் 11ஆம் தேதி பெரிய ஹீரோக்கள் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நாளாகவே இருந்துள்ளது. இருப்பினும் இந்த நாளில் ரிலீசான படங்களில் சினிமா ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

மார்ச் 11, 2025க்கு முன், இதே மார்ச் 11ஆம் தமிழில் விஜய் சேதுபதி நடித்த கிளாசிக் பீல்குட் காதல் கதை, வடிவேலு காமெடியில் அதகளம் செய்த படம், விசு இயக்கிய சூப்பர் ஹிட் பேமிலி டிராமா போன்ற ரசிகர்களை ஈர்த்த சில படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் மார்ச் 11இல் முந்தைய ஆண்டுகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு

சிவாஜி கணேசன் நடிப்பில் பி. மாதவன் இயக்கத்தில் 1972ஆம் ஆண்டு வெளியான படம் ஞானிஒளி. 1862 விக்டர் ஹூயூகோ என்ற பிரான்ஸ் நாவல் ஆச...