இந்தியா, மே 19 -- மே 19, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான குஷி, ஜெயராம் நடித்த முறைமாமன், இயக்குநர் சுந்தர் சி ஹீரோவாக அவதாரம் எடுத்த தலைநகரம், கிளாசிக் காமெடி படமான காசேதான் கடவுளடா போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய். ஜோதிகா, விவேக், விஜயகுமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ரெமாண்டிக் படமாக உருவாகி 2000ஆவது ஆண்டில் ரிலீசான படம் குஷி. ஹீரோ, ஹீரோயின் இடையே இருக்கும் ஈகோவை மையப்படுத்திய கதையம்சத்தில் சுவாரஸ்யம் மிக்க காட்சிகளுடன் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது.

விஜய், ஜோதிகா ஆகிய இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பாராட்டுகளை பெற்றனர். இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளி...