இந்தியா, ஏப்ரல் 17 -- ஏப்ரல் 17, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விஜய்யை மாஸ் ஹீரோவாக்கிய கில்லி, மணிரத்னத்தின் ட்ரெண்ட் செட்டிங் ரொமாண்டிக் படமான ஓ காதல் கண்மணி, தமிழ் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்த பேய் படமான காஞ்சனா 2, நடிகை ரோஜா ஹீரோயினாக அறிமுகமான செம்பருத்தி போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்ற இந்த படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்த மாஸ் மசாலா திரைப்படமான கில்லி 2004இல் வெளியானது. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஒக்கடு படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த கில்லி, தமிழில் மிக பெரிய வெற்றியை பெற்றது.

திருமலை படம் மூலம் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்த விஜய்யை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவர...