இந்தியா, மே 18 -- மே 18, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் டாப் ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் பிரபு நடித்த மிடில் கிளாஸ் மாதவன், பாலசந்தர் இயக்கிய அச்சமில்லை அச்சமில்லை, சிவகுமாருக்கு பெயர் வாங்கி கொடுத்த ரோசாப்பூ ரவிக்கைகாரி போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

டி.பி. கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு, அபிராமி, விவேக், வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகி 2001இல் ரிலீசான படம் மிடில் கிளாஸ் மாதவன். குடும்ப கதை, கணிக்ககூடிய திரைக்கதை என இருந்தாலும் விவேக், வடிவேலு காம்போவின் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

படத்தில் பிரபு, அபிராமி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம...