இந்தியா, மார்ச் 12 -- மார்ச் 12, 2025க்கு முன், இதே மார்ச் 12ஆம் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படம் வெளியாகியுள்ளது. அதேபோல் சிவாஜி கணேசன், ஜெமினி கணசேன் நடித்த சிறந்த கிளாசிக் படங்களும் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் மார்ச் 12இல் முந்தைய ஆண்டுகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு

பி. நீலகண்டன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்து 1955ஆம் ஆண்டில் வெளியான படம் முதல் தேதி. படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருப்பார். என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழியில் படம் உருவானது. கன்னட பதிப்பில் வேறு நடிகர்கள் நடித்திருப்பார்கள்.

இந்தியில் 1954இல் வெளியான பஹேலி தாரிக் என்ற படத்தின் ரீமேக்காக உருவானது....