இந்தியா, ஏப்ரல் 20 -- ஏப்ரல் 18, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 80ஸ் காலகட்டத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தம்பிக்கு எந்த ஊரு, ஜீவன் நடித்து ஹிட்டான நான் அவனில்லை, கார்த்திக் சுப்பராஜ் புதிய முயற்சியாக அமைந்த மெர்குரி போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றன. இந்த படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், மாதவி, சுலக்சனா, செந்தாமரை உள்பட பலர் நடித்து காதல், காமெடி, ஆக்சன், கலந்த ஜனரஞ்சக படமாக உருவாகியிருந்த தம்பிக்கு எந்த ஊரு 1986இல் வெளியானது. பஞ்சு அருணாச்சலம் படத்துக்கு திரைக்கதை எழுதியிருந்தார்.

சிட்டி இளைஞனாகவும், கிராமத்து சென்று அந்த வாழ்க்கைய வாழும் கேரக்டரிலும் காதல், காமெடி, ஆக்சன், செண்டிமென்ட் என ரஜினி சிறப்பான நடிப்பை வெ...