இந்தியா, மார்ச் 7 -- மார்ச் 7, 2025க்கு முன், இதே மார்ச் 7ஆம் தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் மசாலா படம், கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் ரொமாண்டிக் படம் வெளியாகியுள்ளன. மார்ச் 7ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் உங்கள் பார்வைக்கு

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ஜெய்ஷங்கர், ஜெயசித்ரா, ஸ்ரீகாந்த், ஃபடாபட் ஜெயலட்சுமி, வி.கே. ராமசாமி, அசோகன், சுருளி ராஜன், மனோரமா என பலரும் நடித்து 1975இல் வெளியான படம் யாருக்கு மாப்பிள்ளை யாரோ. காதல் கலந்த காமெடி படமாக உருவாகியிருந்த இந்த கதையை அடிப்படையாக வைத்து தான் 2002இல் பிரபு, பிரபு தேவா நடித்த சார்லி சாப்லின் படத்தை உருவாக்கியிருப்பார்கள். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த படம் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது. படத்தில் இடம்பிடித்த அனைத்து நடிகர்களின் ...