இந்தியா, பிப்ரவரி 25 -- பிப்ரவரி 25, 2025க்கு முன், இதே பிப்ரவரி 25ஆம் தேதியில் தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ஹீரோயின்கள் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து பெண்ணியம் பேசிய படம், பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த கிளாசிக் படம் போன்றவை வெளியாகியுள்ளன. அந்த வகையில் முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியான முக்கிய படங்கள் உங்கள் பார்வைக்கு

சிவாஜி கணேசன் - பத்மினி நடிப்பில் கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுத, ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1956இல் வெளியான படம் ராஜா ராணி. எஸ். எஸ். ராஜேந்திரன், என். எஸ். கிருஷ்ணன், ராஜ சுலோக்சனா, டி.ஏ. மதுரம் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் பின்னாளில் வெற்றி கூட்டணியாக அமைந்த சிவாஜி கணேசன் பீம்சிங் இணைந்த முதல் படமாக ராஜா ராணி உள்ளது. பராசக்தி படத்தின் வெற்றிக்கு பிறகு கருணாநி...