இந்தியா, மே 27 -- மே 27, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சிம்பு - நயன்தாரா இணைந்து நடித்த இது நம்ம ஆளு, அஜித்குமார் - கார்த்திக் ஆனந்த பூங்காற்றே, சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு - நயன்தாரா இணைந்து நடித்த ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி 2016இல் ரிலீசான படம் இது நம்ம ஆளு. படத்தில் ஆண்ட்ரியா, சூரி உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

முன்னாள் காதலர்களாக இருந்த சிம்பு - நயன்தாரா பிரேக்கப்புக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சராசரி வெற்றியை பெற்றது. படத்துக்கு சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைத்து, இசையமைப்பாளர...