இந்தியா, ஏப்ரல் 23 -- ஏப்ரல் 23, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் மாதவன் நடித்த ஆக்சன் த்ரில்லர் படமான எதிரி, இயக்குநர் சிகரம் பாலசந்தர் - இயக்குநர் இமயம் பாரதிராஜா இணைந்து நடித்த ரெட்டைச்சுழி போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

தாமிரா இயக்கத்தில் மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் ஆரி அர்ஜுனன், அஞ்சலி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ட்ராமா பாணியில் உருவாகி 2010இல் வெளியான படம் ரெட்டைச்சுழி. கிராமத்து பின்னணியில் உருவாகியிருந்த இந்த படம் தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான் இயக்குநர்கள் இணைந்து நடித்த படமாக இருந்ததால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் வலுவான திரைக்கதை, சுவாரஸ்யமான காட்சிமைப்புகள் இல்லாத காரணத்தால் எதிர்மறை விமர்ச...