இந்தியா, மார்ச் 2 -- மார்ச் 2, 2025க்கு முன், இதே மார்ச் 2ஆம் தேதியில் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஸ்ரீதரின் கிளாசிக் படமான நெஞ்சிருக்கும் வரை, வசந்தபாலன் இயக்கிய அரவான் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு படங்களும் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூலை குவிக்க தவறின. இருப்பினும் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தமிழ் சினிமாவில் வெளியான முக்கிய படங்களில் ஒன்றாக திகழ்கின்றன

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்த ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய நெஞ்சிருக்கும் வரை படம் 1967இல் வெளியானது. சிவாஜி கணேசன், முத்துராமன், கோபாலகிருஷ்ணன், கே.ஆர். விஜயா, கீதாஞ்சலி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். இந்தியா - பாகிஸ்தான் போர் பின்னணியில் மையப்படுத்திய கதையை படமாக்க நினைத்த இயக்குநர் ஸ்ரீதர், தாஷ்கண்ட் பிரகடனம் காரணம...